சக்கு சக்கு வத்திகுச்சி: ஹாரிஸ் ஜெயராஜ் சொன்ன புதிய தகவல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ‘விக்ரம்’ படத்தில் வந்த பழைய பாடல் ஒன்று வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ‘விக்ரம்’ படத்தில் வந்த பழைய பாடல் ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த பாடல் சக்கு சக்கு வத்திகுச்சி. 1995இல் வெளியான அசுரன் படத்தில் வந்த பாடல் தற்போது ‘விக்ரம்’ படத்தில் கமல் நடந்து வரும்போது இந்தப்பாடல் பின்னணியில் குறைவான நேரமே வரும். இப்பாடல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போகவே இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்தப் படத்திற்கு ஆதித்யன் இசையமைத்து இருப்பார். ஹாரிஸ் ஜெயராஜ் தான் புரோகிராமிங் செய்துள்ளார் என அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
Advertisement
Advertisement
கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்து ரசிகர்களிடையே பெறும் வரவேற்பினைப் பெற்று மூன்றே நாட்களில் ‘விக்ரம்’ படம் 150 கோடிகளை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மாமல்லபுரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: அறிவிப்பு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.