விக்ரம் வெற்றி: கமல், சிரஞ்சீவி, சல்மான்கான், லோகேஷ் கனகராஜ் சந்திப்பு
‘விக்ரம்’ படத்தை பார்த்த சிரஞ்சீவி, சல்மான்கான் ஆகியோர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து கூறினர்.
‘விக்ரம்’ படத்தை பார்த்த சிரஞ்சீவி, சல்மான்கான் ஆகியோர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து கூறினர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியானது. படம் வெளிவந்த நாள் முதல் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் திரையரங்குக் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் வசூலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் சிரஞ்சீவி தனது வீட்டில் சல்மான்கான், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது டிவிட்டர் பக்கத்தில், “எனது வீட்டில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சல்மான் கான் அவர்களுடன் ‘விக்ரம்’ படத்தின் அபாரமான வெற்றியை கொண்டாடவும் கௌரவிக்கவும் எனது இனிய பழைய நண்பர் கமலை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி. இப்படம் தீவிரமான திரில்லர் படம். நண்பனுக்கு வாழ்த்துகளும் மகிழ்ச்சியும்” என தெரிவித்தார்.