கரம்பிடிச்ச விக்கி, போவீங்க சொக்கி - வைரலாகும் மதுரை உணவகத்தின் விளம்பரம் - எப்படிலாம் யோசிக்கிறாங்க?
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண புகைப்படத்துடன் கூடிய மதுரை மக்களின் போஸ்டர் இணையதளங்களில் வைரலாகிவருகிறது.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண புகைப்படத்துடன் கூடிய மதுரை மக்களின் போஸ்டர் இணையதளங்களில் வைரலாகிவருகிறது.
நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 9 ஆம் தேதி வெகு கோலாகலமாக நடைபெற்றது. ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட இந்திய அளவிலான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
குறைந்தது ஒரு வார காலத்துக்கு விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் குறித்த செய்திகளே பரபரப்பாக பேசப்பட்டுவந்தது. அவர்களது திருமணத்தில் பறிமாறப்பட்ட உணவுகள் துவங்கி, திருப்பதி சென்றது என அனைத்தும் செய்தியானது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | கமலுடனான சந்திப்பில் நடந்த சுவாரசியம் ... சிவகார்த்திகேயன் பட இயக்குநர் பகிர்ந்த தகவல்
இந்த நிலையில் மதுரை உணவகத்தின் புகைப்படம் ஒன்றின் விளம்பரம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண புகைப்படத்தைப் பகிர்ந்து, காத்திருந்து கரம்பிடிச்சாரு விக்கி, எங்க இடியாப்பத்த சாப்பிட்டா போவிங்க சொக்கி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.