பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல மலையாள நடிகர் என்.டி.பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மலையாள நடிகர் என்.டி.பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிவின் பாலியின் ஆக்சன் ஹீரோ பிஜூ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் என்.டி.பிரசாத். மலையாள படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தார்.
இவர் கொச்சி அருகே உள்ள களமச்சேரியில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது வீட்டுக்கு அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 43.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | 'கவர்ச்சியாக நடிக்க கட்டாயப்படுத்துனாங்க' - பிரியாமணி அதிரடி
குடும்ப பிரச்னை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தினால் இவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் பிரசாத் போதைப் பொருளுடன் காவல்துறையினரிடம் பிடிபட்டதாக கூறப்படுகிறது. இவர் மீது காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.