விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி': ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் மணிகண்டன் இணைந்து தயாரித்துள்ள கடைசி விவசாயி, கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மணிகண்டன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க, ரிச்சர்டு ஹார்வி பின்னணி இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு இயக்குநர் மணிகண்டனே ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதையும் படிக்க | படப்பிடிப்புக்கு நடுவே மாணவர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன்: ''சினிமாவில் நடிக்கிறது...''
Advertisement
Advertisement
இந்த நிலையில் இந்தப் படம் வருகிற 11 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விவசாயிகளின் நிலையை இந்தப் படம் யதார்த்தமாக பதிவு செய்துள்ளது. திரையரங்குகளில் அதிகம் கவனம் பெறமால் போன இந்தப் படம் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.