முகப்பு
செய்திகள்

நடிகர் விஜய்க்கு அரசியல் ஆலோசகர் இவரா ? மதுரை ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு

மதுரையில் நடிகர் விஜய் ரசிகர்களின் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 24 மார்ச், 2022 at 12:00 PM
பகிர்:

விதவிதமாக போஸ்டர்கள் அடிப்பதில் மதுரை மக்களின் பாணியே தனி. குடும்ப நிகழ்வுகள் அரசியல், சினிமா என போஸ்டர் ஓட்டிய பிறகே நிகழ்ச்சிகள் களைகட்டும். குறிப்பாக சினிமா, அரசியல் சார்ந்த போஸ்டர்கள் எப்பொழுதும் பரபரப்பை ஏற்படுத்தும்

இந்த நிலையில் 2026ல் முதல்வர் வேட்பாளர் என விஜய்யின் ரசிகர்கள் புகைப்படத்துடன் கூடிய ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், முடிவு எடுத்தால் முதல்வர் என்றும் 2021ல் தளபதி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும், 2026ல் தளபதி என நடிகர் விஜய்யையும் குறிப்பிட்டுள்ளனர். 

இதில் உச்சமாக பிரஷாந்த் கிஷோரின் படத்துக்கு கீழ் அரசியல் ஆலோசகர் என குறிப்பிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருப்பதும், உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

'பீஸ்ட்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி திரைக்குவருகிறது. இந்தப் படத்தின் டீசர் வருகிற ஏப்ரல் 1 வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பீஸ்ட் படத்துடன் கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாகவிருப்பதால் இரண்டு படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.