ஜி.வி.பிரகாஷின் 'செல்ஃபி' பட முக்கிய காட்சி யூடியூபில் வெளியானது
ஜி.வி.பிரகாஷின் செல்ஃபி படத்திலிருந்து சில நிமிட காட்சி வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறனின் உறவினரும், உதவியாளருமான மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் 'செல்ஃபி'. இயக்குநர் கௌதம் மேனன் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக வர்ஷா நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை டிஜி ஃபிலிம் கம்பெனி மற்றும் வி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
இதையும் படிக்க | ஜி.வி.பிரகாஷின் 'செல்ஃபி' படத்தை விமர்சித்த அன்புமணி ராமதாஸ் : ''நீட் பத்தி...''
Advertisement
Advertisement
இந்தப் படம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தின் ஸ்நீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சி யூடியூபில் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளை கதைக் களமாக கொண்டுள்ளது. இந்தப் படத்தை சமீபத்தில் பாமக இளைஞரணி செயலர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.