ஓடிடியில் வெளியானது பீஸ்ட்
பீஸ்ட் படம் தற்போது நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடிகளில் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13 அன்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு இசை - அனிருத்.
படம் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றதால் நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருக்குத் தனது வீட்டில் விருந்து வைத்தார் விஜய்.
ஜாலியோ ஜிம்கானா, அரபிக் குத்து ஆகிய இரு பாடல்களும் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளன.
Advertisement
Advertisement
இந்நிலையில் பீஸ்ட் படம் தற்போது நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடிகளில் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் சன் நெக்ஸ்டில் ஹிந்தி தவிர இதர நான்கு மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.