எதிர்பார்ப்பைத் தூண்டும் ‘777 சார்லி’ படத்தின் டிரைலர் வெளியீடு
ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘777 சார்லி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘777 சார்லி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் இயக்குநர் கிரண்ராஜ் இயக்கத்தில் நாயை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘777 சார்லி’.
தற்போது இந்தப் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். யாரும் மதிக்காத நாயகனைத் தேடி ஒரு நாய் வருகிறது. அதனுடன் சேர்ந்து பயணிக்கும்படியான காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
Advertisement
Advertisement
கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் இப்படம் தயாராகியுள்ளது.
தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பென்ச்’ நிறுவனம் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.
ரக்ஷித் ஷெட்டியுடன் சங்கீதா ஸ்ரீங்கேரி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜுன் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.