FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மீண்டும் பாலிவுட் செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Updated On : 4 நவம்பர் 2022, 4:34 pm IST
பகிர்:

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னை வெற்றிக்குப் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

அவர் நடிப்பில் உருவான ‘டிரைவர் ஜமுனா’ விரைவில் வெளியாக உள்ளது.

Advertisement

Advertisement

தமிழில் ஃபர்ஹானா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் ஹிந்தியில் ‘மாணிக்’ என்கிற புதிய படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தை சாம்ராட் சக்கரவர்த்தி இயக்குகிறார். 

முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டு டாடி என்கிற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். தற்போதும் மீண்டும் பாலிவுட் சென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments