முகப்பு
செய்திகள்

பொன்னியின் செல்வனால் 'இரவில் நிழல்' வெளியாகத் தாமதமா? - பார்த்திபன் ட்வீட்!

‘இரவின் நிழல்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாக தாமதம் ஆகும் என்று நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபன் கூறியுள்ளார். 

Updated On : 4 நவம்பர் 2022, 11:02 am IST
பகிர்:

‘இரவின் நிழல்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாக தாமதம் ஆகும் என்று நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபன் கூறியுள்ளார். 

பார்த்திபன் எழுதி இயக்கி, தயாரித்து நடித்த படம் 'இரவின் நிழல்'. இப்படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். 

இந்த படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இன்றோ நாளையோ வெளியாகும் என்று பார்த்திபன் நேற்று(வியாழக்கிழமை) கூறியிருந்தார். 

Advertisement

Advertisement

ஆனால், இந்த படம் ஓடிடியில் அடுத்த வாரம்தான் வெளியாகும் என்று தெரிகிறது. 

இதுகுறித்து பார்த்திபன் சமூக வலைத்தள பக்கத்தில், 'அமேசானில் இன்று முதல்’ பொன்னியின் செல்வன். எனவே, வரும் வாரம் வருமாம் ‘இரவின் நிழல்’- செய்தி

பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம். அன்றைய உணவிற்கு அன்றன்று உழைக்கும் மக்கள் நிலையே கவலைக்கிடம். இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் கடுகளவு உதவுவதும் பெருங்கொடை! 

குடையாக விரியும் அரசின் உதவிகள், அடுத்த சீசனில் மழைக்கும்முன் இடும் கூடுதல் திட்டமிடலால் மக்கள் நலம் கூடும். மழைசாரல் பட சூடான தேனீரோடு துவங்குவோம் இந்நாளை!' என்று குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரத்தில் பார்த்திபன் நடித்துள்ள மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' அமேசான் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.