முகப்பு
செய்திகள்

‘மாவீரன்’ படப்பிடிப்பு: புகைப்படத்தை வெளியிட்ட அதிதி ஷங்கர்!

‘மாவீரன்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படத்தை வெளியிட்ட அதிதி ஷங்கர் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக பதிவிட்டுள்ளார்.

Updated On : 8 நவம்பர் 2022, 1:14 pm IST
பகிர்:

‘மாவீரன்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படத்தை வெளியிட்ட அதிதி ஷங்கர் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக பதிவிட்டுள்ளார்.

ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் ரூ. 100 கோடி வசூலை எட்டியதைத் தொடர்ந்து அவர் அடுத்து நடித்து வரும் மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார். மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

சமீபத்தில் வெளியான ப்ரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதனால் சிவகார்த்திகேயன் தனது படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகள் வைக்க வேண்டுமென இயக்குநர் மடோன் அஸ்வினுடன் கூறியதாகவும், இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் மழைக் காரணமாகவே நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ள அதிதி ஷங்கர், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதிதியின் இந்த பதிவை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.