யுவன் குரலில் ‘என்னை விட்டு உயிர் போனாலும்...’ பாடல் !
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ படத்தின் பிரபலமான பாடல் யுவன் குரலில் வெளியாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ படத்தின் பிரபலமான பாடல் யுவன் குரலில் வெளியாகியுள்ளது.
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார். சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் சித் ஸ்ரீ ராம் பாடிய ‘என்னை விட்டு உயிர் போனாலும்’ பாடல் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் யுவன் குரலில் இந்தப் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. யுவன் ரசிகர்கள் 'இந்த பாடல் என்னை வேறு உலகத்திற்கு கூட்டிச் செல்கிறது’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Related Article
சமந்தாவின் சண்டைப் பயிற்சி விடியோவை பாராட்டிய பிரபல இயக்குநர்!
கார்த்தியின் ‘ஜப்பான்’: முதல் பார்வை போஸ்டர் வெளியானது!
ரஞ்சிதமே பாடலுக்கு ஷிவானியின் குத்தாட்டம்: வைரல் விடியோ
ஐஸ்வர்யா ராயின் ‘விடை கொடு சாமி விட்டுப் போகின்றேன்...’ பாடல் திடீரென வைரலாக காரணம் என்ன?
சமந்தாவின் ‘யசோதா’: மூன்று நாள் வசூல் இத்தனை கோடியா!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.