ரஞ்சிதமே பாடலுக்கு ஷிவானியின் குத்தாட்டம்: வைரல் விடியோ
விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு நடிகை ஷிவானி நாராயணன் நடனமாடிய விடியோ வைரலாகி வருகிறது.
'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக இணைந்து நடித்த ஷிவானி, மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். தற்போது வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் படத்திலும் நடித்துள்ளார்.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ளது. இந்த படம் 2023 பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது.
'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் விஜய் மற்றும் மானசியின் குரலில் இந்த பாடல் வெளியானது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
தற்போது இந்த பாடலுக்கு ஷிவானியின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.