5 கோடி பார்வைகளைக் கடந்தது ‘ரஞ்சிதமே’ பாடல்
வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூப்பில் இதுவரை 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூப்பில் இதுவரை 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படத்துக்கு இசை - தமன். இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
சமீபத்தில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ’லவ் டுடே’ இதுவரை இத்தனை கோடி வசூலா? மகிழ்ச்சியில் படக்குழுவினர்
இந்நிலையில், விஜய் பாடிய இப்பாடல் இதுவரை யூடியூப்பில் 5 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.
இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.