திருமண தேதியை அறிவித்த கௌதம் கார்த்திக்
நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமாவுடனான திருமண தேதியை அறிவித்துள்ளார்.
நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமாவுடனான திருமண தேதியை அறிவித்துள்ளார்.
கடல் படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். அதைத் தொடர்ந்து 'வை ராஜா வை’, ‘ரங்கூன்’ உள்ளிட்ட படங்களில் கவனத்தை ஈர்த்தார். ஆனால், சமீபத்தில் வெளியான சில படங்கள் தோல்விப்படமாக அமைந்தன.
இந்நிலையில், ’அச்சம் என்பது மடமையடா’, ’தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வந்த கௌதம் கார்த்திக் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.