முகப்பு
செய்திகள்

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘தீங்கிரை’ படத்தின் டிரைலர்! 

நடிகர் ஸ்ரீகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தீங்கிரை’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

Updated On : 28 நவம்பர் 2022, 8:25 pm IST
பகிர்:

நடிகர் ஸ்ரீகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தீங்கிரை’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவாதாஸ் எழுதி இயக்கும் இப்படத்தில் ஸ்ரீகாந்த், 8 தோட்டாக்கள் வெற்றி, ஸ்மிருதி வெங்கட், நிழகல் ரவி, அபூர்வா, சங்கீதா, குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டிடபுள்யூடி மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிப்பில் யுவராஜ் மனோகரன் ஒளிப்பதிவு செய்ய பிரகாஷ் நிகில் இசையமைக்க ஹாரிஷ் அர்ஜூன் பின்னணி இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

சைக்கோ த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “முதுகு தண்டு சில்லிடும் தீங்கிரை படத்தின் டிரைலர் வெளியிடுவதில் மகிழ்ச்சி. படம் பெரும் வெற்றியடைய படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments