முகப்பு
செய்திகள்

முறுக்கு மீசையுடன் கமல்! வைரலாகும் புகைப்படம்

நடிகர் கமல்ஹாசன் முறுக்கு மீசையுடன் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Updated On : 4 அக்டோபர் 2022, 11:05 am IST
பகிர்:

நடிகர் கமல்ஹாசன் முறுக்கு மீசையுடன் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு கடந்த 2019-ல் தொடங்கப்பட்டது.
 
இதற்கிடையே படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, கரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் பூஜை போடப்பட்டு, திருப்பதியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.

Advertisement

Advertisement

இந்நிலையில், படத்தின் ஆடை வடிவமைப்பாளரான அம்ரிதா ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த படத்தில், நடிகர் கமல்ஹாசன் புதிய தலை அலங்காரத்துடன், முறுக்கு மீசை வைத்து அட்டகாசமாக இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments