நடிகர் தனுஷூடன் இணையும் சூப்பர் ஸ்டார்!
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் பிரபல நடிகர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் பிரபல நடிகர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: விக்கி - நயன் குழந்தைகள் விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு
மேலும், தென்காசியில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் நடிகர் தனுஷூடன் கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ஷிவ ராஜ்குமார் இணைய உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
1930களின் பின்னணியில் நடக்கும் கதையாக கேப்டன் மில்லர் உருவாகிவருகிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்களான ராக்கி, சாணிக் காயிதம் படங்களைப்போல் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்சன் படமாக கேப்டன் மில்லர் இருக்கும் என கூறப்படுகிறது.