'சர்தார்' டிரைலர் எப்போது? அறிவிப்பு
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சர்தார் படத்தை விஷாலின் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பல வித்தியாசமான தோற்றங்களில் கார்த்தி நடித்துள்ளார்.
மேலும், ஜி.வி.பிரகாஷ் இசையில் நடிகர் கார்த்தி பாடிய ஏறுமயிலேறி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஒளிப்பதிவு - ஜார்ஜ் சி வில்லியம்ஸ்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | ஆதிபுருஷ் சர்ச்சை.. பிரபாஸூக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சர்தார் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் நாளை(அக்.14) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் 21 ஆம் தேதி வெளியாகிறது. இதனால் இரண்டு படங்களுக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.