போதைப் பொருள் சர்ச்சை - ரசிகர்களிடம் யுவன் கோரிக்கை
லவ் டுடே பாடல் சர்ச்சையான நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது ரசிகர்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
லவ் டுடே பாடல் சர்ச்சையான நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது ரசிகர்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
யுவன் இசையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ள 'லவ் டுடே' படத்திலிருந்து பச்ச இலை என்ற பாடல் வெளியாகி வைரலாகிவருகிறது. இருப்பினும் பாடல் வரிகளில் போதைப்பொருள் பற்றி குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை ஆதரிப்பது போல உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள யுவன், ''இது படத்தின் ஜாலியான தருணத்துக்காக உருவாக்கப்பட்ட ஃபன்னாண பாடல். ஆனால் நிஜ வாழ்க்கையில் போதைப் பொருள் பயன்படுத்துவதிலிருந்து விலகியிருங்கள். என் கோரிக்கை'' என பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | வசூலைக் குவிக்கும் ‘காந்தாரா’...
ஜெயம் ரவியின் 'கோமாளி' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், இந்தப் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் மூலமாக ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.