முகப்பு
செய்திகள்

லவ் டுடே பட வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய உதயநிதியின் ரெட் ஜெயண்ட்

லவ் டுடே படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Updated On : 25 அக்டோபர் 2022, 5:24 pm IST
பகிர்:

லவ் டுடே படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

ஜெயம் ரவியின் கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே என்ற படத்தை எழுதி தயாரித்து இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன. 

மேலும் இவானா இந்தப் படத்தின் நாயகியாக நடிக்க சத்யராஜ், யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

ரெட் ஜெயண்ட் வெளியிட்ட காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம், வெந்து தணிந்தது காடு, சர்தார் போன்ற ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments