'நித்தம் ஒரு வானம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
அசோக் செல்வன், அபர்ணா பாலமுரளி நடித்துள்ள நித்தம் ஒரு வானம் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அசோக் செல்வன், அபர்ணா பாலமுரளி நடித்துள்ள நித்தம் ஒரு வானம் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ரா.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘நித்தம் ஒரு வானம்’. வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
சுபாவாக ரிது வர்மா, மதியாக அபர்ணா பாலமுரளி, மீனாட்சியாக சிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளதாக படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே இந்தப் படத்திலிருந்து ‘உனக்கென நான்’ எனும் பாடல் வெளியாகியிருந்தது.
இந்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.