தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா வருகிற 4 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா வருகிற 4 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்கள், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக விருதுகள் வழங்கப்படும். இந்த நிலையில் கடந்த 2009 ஆண்டு முதல் 2014 ஆண்டுக்கான விருது பெரும் திரைப்படம், கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதாளர்களின் பட்டியல்
Advertisement
Advertisement
ஆனால் இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்த நிலையில், விருது வழங்கும் விழா அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 4 ஆம் தேதி மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் 2009 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆண்டுவரையிலான சிறந்த திரைப்பட, சின்னத்திரை கலைஞர்களுக்கும் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இதையும் படிக்க | இயக்குநர் விக்ரமன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் கே.எஸ்.ரவிக்குமார்
அதன்படி சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படவுள்ளன. சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் 160 பேருக்கு தலா 5 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படவுள்ளன.
அதே போல சின்னத்திரை தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 1 லட்சமும் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் 81 பேருக்கு தலா 3 சவரன் தங்கமும் வழங்கப்படவுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.