வடிவேலுவின் பிறந்த நாள் பரிசாக வெளியானது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' புதிய போஸ்டர்
நடிகர் வடிவேலுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகிவரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் வடிவேலுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகிவரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாப்பாத்திரமான நாய் சேகர் பட கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய படம் ஒன்று உருவாகிவருகிறது.
நாய் சேகர் என்ற பெயரில் முன்னரே சதிஷ் படம் அறிவிக்கப்பட்டதால் இந்தப் படத்துக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டது. தலைநகரம் படத்தை இயக்கிய சுராஜ் இந்தப் படத்தை இயக்கிவருகிறார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த நிலையில் வடிவேலுவின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.