முகப்பு
செய்திகள்

மீண்டுமா? சிக்கலில் ‘விக்ரம் வேதா’

ஹிந்தியில் உருவான ‘விக்ரம் வேதா’ திரைப்படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

Updated On : 28 செப்டம்பர் 2022, 9:11 am IST
பகிர்:

ஹிந்தியில் உருவான ‘விக்ரம் வேதா’ திரைப்படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா படம் 2017-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி ஹிந்தியிலும் இயக்கியுள்ளார்கள். 

Advertisement

Advertisement

ஹிருதிக் ரோஷன், சயிஃப் அலி கான், ராதிகா ஆப்தே போன்றோர்  நடிப்பில் உருவான இப்படம்  நாளை மறுநாள் (செப்.30) அன்று  வெளியாகவுள்ளது. அதே நாளில் பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், சமீப காலமாக பாலிவுட் படங்களுக்கு எதிராக டிவிட்டரில் புறக்கணிப்பை நிகழ்த்தி வரும் ரசிகர்கள் மீண்டும் ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தையும் புறக்கணிப்பதாக ‘பாய்காட் விக்ரம்வேதா’ என்கிற ஹாஷ்டேக்கை டிரண்ட் செய்து வருகிறார்கள்.

தடை செய்வதற்கான காரணமாக மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலையைச் சுட்டியுள்ளனர்.

முன்னதாக, ‘ரக்‌ஷாபந்தன்’ ‘லால்சிங் சத்தா’ உள்ளிட்ட படங்கள் புறக்கணிப்பைச் சந்தித்து வணிக ரீதியாக மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தன.

தற்போது, ‘விக்ரம் வேதா’விற்கும் இப்பிரச்னை எழுந்துள்ளதால் படக்குழுவினர் கலக்கத்தில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments