சிரஞ்சீவி - சல்மான் கான் நடித்துள்ள ’காட்ஃபாதர்’ டிரைலர் வெளியீடு
சிரஞ்சீவி - சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் காட்ஃபாதர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சிரஞ்சீவி - சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் காட்ஃபாதர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தமிழ் இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் காட்ஃபாதர் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான லுசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ’காட்ஃபாதர்’.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: வெளியானது 'நானே வருவேன்' திரைப்படம்: ரசிகர்கள் கொண்டாட்டம்
இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் சிரஞ்சீவியின் தம்பியாக சல்மான் கானும் நடித்துள்ளனர். இசை - தமன். ஒளிப்பதிவு - நிரவ் ஷா.
முன்னதாக, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிக்கான படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 57 கோடிக்கு விலை பேசியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
‘காட்ஃபாதர்’ அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.