செய்திகள்

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம் ஒருவர் விலகியுள்ளார். 

DIN

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகியுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த தொடர் ஜூலை 12, 2021 முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் நடிகர்கள் தீபக் தினகர், நக்ஷத்ரா நாகேஷ், ரேகா கிருஷ்ணப்பா, மீரா கிருஷ்ணா, ராமச்சந்திரன் மகாலிங்கம், நவின் வெற்றி, லாவண்யா மாணிக்கம், பிரபாகரன் சந்திரன், அனிதா வெங்கட், தர்ஷ்னா ஸ்ரீபால் கோலேசா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தீபக் தினகர் தமிழ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் சரஸ்வதியின் கதாபாத்திரத்தில் நக்ஷத்ரா நாகேஷ் நடித்து வருகிறார். தமிழும் சரஸ்வதியும் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்துவந்த தர்ஷ்னா அந்த தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆனால்  தர்ஷ்னா தரப்பிலிருந்து இதுவரை தகவலும் வெளியாகவில்லை

தர்ஷ்னா சன் குழுமத்தின் ஆதித்யா சேனலில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பின்னர் சித்தி 2 சீரியலிலும் நடித்தார். பின்னர், தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT