இது என் சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கும்: ஜி.வி.பிரகாஷ்
கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் குறித்து ஜி.வி.கருத்து தெரிவித்துள்ளார்.
’ஜிப்ஸி’ படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கி வரும் படம் ‘ஜப்பான்’. இதில் கார்த்தி நாயகனாகவும், அனு இமானுவேல் நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இதைக் குறிபிட்ட ஜி.வி.பிரகாஷ் குமார் ‘ஜப்பான் படத்தின் ஒரு மெலடி பாடலுக்காக ஷான் ரோல்டனின் அபாரமான குரலைப் பதிவு செய்தததில் மிகுந்த மகிழ்ச்சி. என் இசை வாழ்வின் சிறந்த பாடல்களில் ஒன்றாக இது இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.