செய்திகள்

தமன்னாவைப்போல் மாறிய எதிர்நீச்சல் நாயகி மதுமிதா! ரசிகர்கள் பகிரும் விடியோ!!

எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற முதன்மை பாத்திரத்தில் நடிகை மதுமிதா நடித்துவருகிறார். இவர் தெலுங்கு மொழித் தொடர்களில் நடித்தவர். 

DIN


எதிர்நீச்சல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் மதுமிதாவின் நடனம் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற முதன்மை பாத்திரத்தில் நடிகை மதுமிதா நடித்துவருகிறார். இவர் தெலுங்கு மொழித் தொடர்களில் நடித்தவர். 

தெலுங்கு மொழி தொடரில் முத்தக்காட்சிகளில் நடித்ததற்காக சின்னத்திரை வட்டாரத்தில் பெரிதும் விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் உள்ளானவர். 

எதிர்நீச்சல் தொடரிலும் சிறப்பான நடிப்பை வழங்கி வருகிறார். இதன்மூலம் இயக்குநர் திருச்செல்வம் (எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர்) தேர்வு செய்த நாயகிகளின் மதிப்பை மதுமிதா காப்பாற்றியுள்ளார் என்றே ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் நடிகை மதுமிதா சமூகவலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வருகிறார். அவ்வபோது புகைப்படங்களையும் விடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துவிடுவார். 

அந்தவகையில் தற்போது தமன்னாவின் பாடலுக்கு நடிகை மதுமிதா நடனமாடியுள்ளார். ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு தமன்னாவின் நடன அசைவுகளை அச்சு அசலாக செய்து மதுமிதா விடியோ வெளியிட்டுள்ளார். அவரின் இந்த விடியோவுக்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களையும், ஃபையர்களையும் விட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினியின் முதல் திரைப்படம் - 50வது ஆண்டு கூலி வரை வெளியிடும் ஒரே திரையரங்கம்!

விஜய் டிவியில் ஆக. 11 முதல் புதிய நேரத்தில் தொடர்கள்!

மலைப்பாதையில் திடீர் நிலச்சரிவு! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய வாகனஓட்டிகள்! | Uttarakhand

அமேதியில் குடும்பத் தகராறில் கணவரின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி!

மராத்திய இளவரசி... ரிங்கு ராஜ்குரு!

SCROLL FOR NEXT