விஜய் தேவரகொண்டாவின் குஷி டிரைலர் வெளியானது!
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள குஷி படத்தின் டிரைலர் இன்று(ஆக.9) வெளியாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள குஷி படத்தின் டிரைலர் இன்று(ஆக.9) வெளியாகியுள்ளது.
ஷிவ நிர்வாணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். குஷி திரைப்படம் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வரும் செப்.1 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: சல்மான் கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?
இந்த நிலையில், படக்குழுவினர் வெளியிட்ட குஷி படத்தின் டிரைலர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலரின் கால அளவு 2.41 நிமிடங்கள் ஆகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.