அனிமல் அல்லது அர்ஜுன் ரெட்டி?: இயக்குநர் சந்தீப் வங்காவின் அதிரடி பதில்கள்!
அட்லி இயக்கிய ஜவான் படம் பிடித்திருப்பதாக அனிமல் இயக்குநர் சந்தீப் வங்கா கூறியுள்ளார்.
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சந்தீப் அதேப் படத்தினை ஹிந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் எடுத்தார். அதன் வெற்றியை தொடர்ந்து ரன்பீர கபூரை நாயகனாக வைத்து சந்தீப் இயக்கிய அனிமல் திரைப்படம் 3 வாரத்தில் ரூ.862 வசூலித்துள்ளது.
சில விமர்சகர்கள் இந்தப் படம் பெண்களுக்கு எதிரான படமென கூறினார்கள். அவர்களுக்கு சினிமா குறித்த அறிவு குறைவென இயக்குநர் அவர்களை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில், “எனக்கு ஷாருக்கானுடன் பணியாற்ற ஆசையாக இருக்கிறது. நான் அவரது ரசிகன். எனக்கு அவரது பதானைவிட ஜவான் படம் பிடித்திருந்தது. விரைவில் ஷாருக்கானுடன் இணைந்து படம் இயக்க ஆசையாக உள்ளது. பார்ப்போம் என்ன நடக்கிறதென” எனக் கூறினார்.
Advertisement
Advertisement
மிகவும் பிடித்த நடிகை யார் எனக் கேட்டதற்கு, “ நடிகை ரம்யா கிருஷணன் மிகவும் பிடிக்கும்” எனக் கூறினார் சந்தீப் வங்கா. நீங்கள் இயக்கிய படங்களில் எது பிடிக்கும் அனிமல் அல்லது அர்ஜுன் ரெட்டியா எனக் கேட்டதற்கு, “அர்ஜுன் ரெட்டி பிடிக்கும்” எனக் கூறினார்.
ஷாருக்கானின் பதான் திரைப்படம் உலக முழுவதும் ரூ.1050 கோடி வசூலித்து அசத்தியது. இதில் தீபிகா படுகோன், சல்மான் கான் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார்கள். அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படமும் ரூ.1148 கோடி வசூலித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.