முகப்பு
செய்திகள்

விடுதலை படத்தின் முதல் பாடல் எப்போது? 

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட். 

Updated On : 4 பிப்ரவரி, 2023 at 2:16 PM
பகிர்:

‘அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார். 

இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.   

இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.விடுதலை திரைப்படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் சமீபத்தில்தொடங்கின. இதில் தனது காட்சிகளுக்கு டப்பிங் கொடுக்கும் பணிகளில் நடிகர் விஜய் சேதுபதி ஈடுபட்டார். 

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் முதல் பாடல் பிப்.8ஆம் நாள் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பாடலை நடிகர் தனுஷ் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.