செய்திகள்

15 நாளில் ரூ.100 கோடி வசூலான தெலுங்கு திரைப்படம்! 

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘தமாகா’ திரைப்படம் தெலுங்கில் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. 

DIN

54 வயதான ரவி தேஜா தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் த்ரினாதா ராவ் நக்கினா இயக்கத்தில் உருவான ‘தமாகா’ திரைப்படம் கடந்த வருடம் டிச.23ஆம் நாள் வெளியானது. 

அபிஷ்சேக் அகர்வால், டி.ஜி. விஷ்வபிரசாத் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரவி தேஜாவுடன் ஸ்ரீலீலா நடித்துள்ளார். ஆக்‌ஷன் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளது.  பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ள பாடல்களும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. பீபுள் மீடியா பேக்டரி வெளியிட்டது. 

ஜெயராம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.  ரூ. 40 கோடியில் உருவான இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் தற்போது ரூ. 101 கோடிகளுக்கும் மேல் வசூலாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

ராஜமௌலி அல்லாத தெலுங்கு திரைப்படம் இந்த சாதனையைப் படைப்பதற்கு நான் எஸ் ஏஸ் ஆர் என ரவி தேஜா ரசிகர்கள் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். 

மேலும், தற்போது 'வாட் இஸ் ஹேபனிங்' என்ற பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT