செய்திகள்

970 திரைகளில் மாஸ் ரிலீஸாகும் துணிவு! 

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் துணிவு திரைப்படம் மலேசியாவில் 970 திரைகளில் வெளியாக உள்ளது. 

DIN

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது.  

துணிவு படத்தின் டிரைலர் 59 மில்லியன் (5.9 கோடி) பார்வைகளைக் கடந்து அசத்தி வருகிறது. மேலும் திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். 

மலேசியாவில் 126 சினிமா திரையரங்குகளில் 970 திரைகளில் வெளியாக உள்ளதை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனையில் சாதனை படைத்த மெர்சிடிஸ் பென்ஸ்!

ஆண்டின் முதல் சூப்பர் மூன்... இன்றிரவில் மிகப் பிரகாசமாக ஒளிரும் நிலவு!

தாய்லாந்திலிருந்து... ராய் லட்சுமி!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி: ராகுல் காந்தி கண்டனம்!

பார்த்தேன் ரசித்தேன்... நபா நடேஷ்!

SCROLL FOR NEXT