முதல் நாளிலேயே வசூலில் சதமடித்த ஷாருக் கானின் பதான்!
ஷாருக் கான் நடித்த பதான் படம் முதல் நாளன்று உலகெங்கும் ரூ. 100 கோடி வசூலை அள்ளியுள்ளதாக...
ஷாருக் கான் நடித்த பதான் படம் முதல் நாளன்று உலகெங்கும் ரூ. 100 கோடி வசூலை அள்ளியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் - பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இசை - விஷால் & ஷேகர்.
2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக் கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் - பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 240 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது.
Advertisement
Advertisement
பதான் படம் நேற்று (ஜனவரி 25) ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
இந்நிலையில் பதான் படம் முதல் நாளன்று உலகெங்கும் ரூ. 100 கோடி வசூலை எட்டி அசத்தியுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 54 கோடி வசூல் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வார இறுதியில் இதன் வசூல் மேலும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.