செய்திகள்

சலார் படத்தின் டீசர் குறித்த அப்டேட்!

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சலார் படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சலார் படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அந்த படத்தின் பிரமாண்டம் குறித்து பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.

அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர்  பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

சலார் திரைப்படம்  வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ் அறிவித்திருந்தது.  

இந்நிலையில், இப்படத்தின் டீசர் ஜூலை 6 ஆம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT