முகப்பு
செய்திகள்

மிகக் கொடூரமான மனிதன்: சலார் திரைப்படம் பற்றி நடிகர் பிரபாஸ் பிரமிப்பு! 

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள சலார் திரைப்படம் இன்னும் நூறு நாள்களில் வெளியாகுமென கவுன்டவுன் தொடங்கியுள்ளது. 

Updated On : 20 ஜூன் 2023, 3:51 pm IST
பகிர்:

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அந்த படத்தின் பிரமாண்டம் குறித்து பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.

அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர்  பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

Advertisement

Advertisement

சலார் 2023 - செப்டம்பர் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பலே ஃபிலிம்ஸ் அறிவித்திருந்தது.  இன்னும் 100 நாள்கள் உள்ள நிலையில் படத்தின் கவுன்டவுனை ஆரம்பித்துள்ளது படக்குழு. 

நடிகர் பிரபாஸ் இதனை பகிர்ந்து, “மிகக் கொடூரமான மனிதனின் வளர்ச்சியை காணுங்கள்,  சலார் இன்னும் 100 நாள்களில்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.