ஜெயம்ரவியின் 'அகிலன்' திரைப்பட டிரைலர் வெளியீடு
நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பூலோகம் படத்துக்கு பிறகு இயக்குநர் கல்யாண கிருஷ்ணனுடன் ஜெயம் ரவி இணைந்திருக்கும் படம் அகிலன். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் தான்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.