முகப்பு
செய்திகள்

காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

காஜல் அகர்வால், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘கோஸ்டி’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 மார்ச் 2023, 4:36 pm IST
பகிர்:

காஜல் அகர்வால், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘கோஸ்டி’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

குலேபகாவலி, ஜாக்பாட் படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால், யோகிபாபு, ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி. மனோ பாலா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பிரபலமான நகைச்சுவை நடிகர்கள் பலர் நடித்துள்ள படம்தான் ‘கோஸ்டி’. இந்தப் படம் நகைச்சுவை கலந்த பேய் படமாக உருவாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சீட் பிக்ஸர்ஸ் தயாரித்துள்ளது. ஜாகோப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Advertisement

இந்நிலையில்,  ‘கோஸ்டி’ படம் மார்ச் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.