நாயகனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி மகன்!
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நாயகனாக அறிமுகமாக உள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கவுள்ள திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் எனத் தகவல் வெளியானது. தற்போது, இப்படத்தின் பூஜை நாளை(நவ.24) சென்னையில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: விஜய் - 68 படத்தின் பெயர் அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
முன்னதாக, விஜய் சேதுபதி தன் மகனுடன் சிந்துபாத் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.