ஓடிடியில் அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி!
அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் நாளை ஓடிடியில் வெளியாகிறது.
அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் நாளை ஓடிடியில் வெளியாகிறது.
சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா தற்போது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்திருந்தார். யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அனுஷ்காவின் 48வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிரவ் ஷா ஒளிப்பதிவில் பி.மகேஷ்பாபு இயக்கத்தில் அனுஷ்கா, நவின் பாலிஷெட்டிவுடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் ஜெய சுதா, முரளி ஷெர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் ரெட்டி படத்தின் இசையமைப்பாளர் ரதன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இப்படம் கடந்த செப்.7ஆம் தேதி வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்ற நிலையில், இத்திரைப்படம், ரூ.50 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: வணங்கான் கண்டிப்பாக பேசப்படும்: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
இந்த நிலையில், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் நாளை (அக்.5) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.