செய்திகள்

ஜப்பான் டீசர் எப்போது?

ஜப்பான் திரைப்படத்தின் டீசர் குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

’ஜிப்ஸி’ படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கி வரும் படம் ‘ஜப்பான்’. இதில் கார்த்தி நாயகனாகவும், அனு இமானுவேல் நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு ஜப்பான் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.

சமீபத்தில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த நிலையில், ஜப்பான் படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளது. டீசர் காட்சிகளை தணிக்கைத் துறையினர் கண்டு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

வைகோ தலைவராக தோல்வியைத் தழுவியிருக்கிறார்!மதிமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்! மல்லை சத்யா பேட்டி

இந்தியாவில் 79 ஆயிரம் கோடிக்கு ஐபோன் விற்பனை! டிம் குக்கிடம் கொந்தளித்த டிரம்ப்!

TTV Dhinakaran கூட்டணியிலிருந்து விலக நயினார் நாகேந்திரன் காரணமா? குற்றச்சாட்டும் பதிலும்!

ரூ.1.88 லட்சத்துக்கு லட்டு ஏலம் வென்ற தெலங்கானா முஸ்லிம் பெண்!

SCROLL FOR NEXT