FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஜிவி பிரகாஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு!

ஜிவி பிரகாஷ் நடித்துவரும் ரிபெல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

Updated On : 25 அக்டோபர் 2023, 12:28 pm IST
ஜி.வி.பிரகாஷ்
பகிர்:

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில் கேப்டன் மில்லர், டைகர் நாகேஸ்வர ராவ், வணங்கான் ஆகிய திரைப்பங்கள் வெளியாக உள்ளன.

அதே நேரம் கதாநாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார்.  இவர் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான ‘அடியே’ திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இதையடுத்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துவரும் படம் ரிபெல். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை, மூணார் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது. அதனை முன்னிட்டு படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். 

இந்நிலையில் ரிபெல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (அக்டோபர் 26) ரிபெல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments