முகப்பு
செய்திகள்

ஜெயம் ரவி பிறந்த நாள்: சைரன் பட சிறப்பு விடியோ வெளியீடு

ஜெயம் ரவி பிறந்த நாளையொட்டி சைரன் படத்தின் சிறப்பு விடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Updated On : 12 நவம்பர் 2023, 1:23 pm IST
பகிர்:

ஜெயம் ரவி பிறந்த நாளையொட்டி சைரன் படத்தின் சிறப்பு விடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் ஜெயம் ரவி இறைவன் படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

தொடர்ந்து அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ’ஜீனி’ என்கிற ஃபேண்டசி படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.

Advertisement

இப்படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தின் நாயகிகளான கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கெபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில், ஜெயம் ரவியின் சைரன் படத்தின் சிறப்பு விடியோ வெளியாகியுள்ளது.  இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

கிரைம் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் சைரன் படத்தை அந்தோணி பாக்யராஜ் எழுதி இயக்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.