FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கொலைச்சேவல் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட பா.ரஞ்சித்!

கொலைச்சேவல் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.

Updated On : 29 செப்டம்பர் 2023, 2:55 pm IST
பகிர்:

கொலைச்சேவல் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.

வி.ஆர். துதிவாணன் எழுதி, இயக்கும் படத்தில், கலையரசன் கதாநாயகனாக நடிக்கிறார். கொலைச்சேவல் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக தீபா பாலு நடிக்கிறார்.

ஆர்பி பிலிம்ஸ், ஆர்பி பாலா இப்படத்தை தயாரிக்கிறார். மேலும், இப்படத்தில் பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

இப்படத்துக்கு பி.ஜி. முத்தைய்யா ஒளிப்பதிவு செய்ய, சாந்தன் இசையமைக்கிறார்.

திருப்பங்கள் நிறைந்த காதல் கதையாக உருவாகியுள்ள கொலைச்சேவல் படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments