‘தங்கலான்’ படத்தின் மேக்கிங் விடியோ!
நடிகர் விக்ரமின் பிறந்த நாளையொட்டி ‘தங்கலான்’ படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விக்ரமின் பிறந்த நாளையொட்டி ‘தங்கலான்’ படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் நடிகர் பசுபதி, நடிகை பார்வதி, மாளவிகா மோகனனும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பிரத்யேக மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.