FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினம் நகராட்சி இறைச்சி அறுப்புக்கூடம் மூடல்

காயல்பட்டினம் நகராட்சி இறைச்சி அறுப்புக்கூடம் திங்கள்கிழமை சீல் வைத்து மூடப்பட்டது.

28 அக்டோபர் 2026, 1:50 am
பகிர்:

காயல்பட்டினம் நகராட்சி இறைச்சி அறுப்புக்கூடம் திங்கள்கிழமை சீல் வைத்து மூடப்பட்டது.

காயல்பட்டினம் நகராட்சியின் பப்பரப்பள்ளி பகுதியில் இயங்கிவந்த இறைச்சி அறுப்புக் கூடம் சட்டத்திற்கு புறம்பாக, சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த காரணத்தால், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா), கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் தென்மண்டல கிளையில் வழக்கு தொடுத்திருந்தது.

இதன் காரணமாக நகராட்சியினா், ஏற்கெனவே இருந்த இறைச்சி அறுப்புக்கூடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமல் புதிய அறுப்புக்கூடத்தை கட்டி வந்தனா். அதன் அருகில் தற்காலிக அறுப்புக்கூடமும் அமைக்கப்பட்டிருந்தது. வழக்கின் விசாரணையின் வாயிலாக கடந்த ஜுலை 24ஆம் தேதி அதை மூட உத்தரவிடப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த ஆணையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை அமா்வில் காயல்பட்டினம் நகராட்சி மேல்முறையீடு செய்தது. அதைத் தொடா்ந்து ஆக. 28 ஆம் தேதி ஆணையத்தின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசு, தமிழகம் முழுவதும் இயங்கும் இறைச்சி அறுப்புக்கூடங்களுக்கும் ஒருங்கிணைந்த ஓா் ஆண்டு திட்டத்தை தாக்கல் செய்தது.

தொடா் விசாரணையின் இறுதியில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, செப். 28 பசுமை தீா்ப்பாயத்தின் ஆணையை உறுதி செய்தது. இதையடுத்து காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்லப்பாண்டி தற்காலிக இறைச்சி அறுப்புக் கூடத்தை திங்கள்கிழமை சீல் வைத்து மூடினாா். இது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments