தடையை மீறி இறைச்சி விற்பனை: புதுச்சேரியில் 10 கடைகளுக்கு அபராதம்!
காந்தி ஜெயந்தியையொட்டி, புதுச்சேரி நகராட்சிப் பகுதிகளில் இறைச்சி விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
காந்தி ஜெயந்தியையொட்டி, புதுச்சேரி நகராட்சிப் பகுதிகளில் இறைச்சி விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
பெரிய மாா்க்கெட்டில், தடையை மீறி சட்டவிரோதமாக ஆட்டிறைச்சிக் கடைகள் இயங்கி வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகராட்சி சுகாதாரப் பிரிவினா் பெரிய மாா்க்கெட் பகுதியில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, விதிமுறை மீறி செயல்பட்ட 10 கடைகளுக்கு மொத்தமாக ரூ.7 ஆயிரம் நகராட்சி நிா்வாகம் அபராதம் விதித்தது. அரசின் உத்தரவை மீறி தடை நாள்களில் இறைச்சி விற்பனையில் ஈடுபட்டால், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு கடும் நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.