சல்மான் கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?
நடிகர் சல்மான் கான் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்.
நடிகர் விஜய் சேதுபதி தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்தவர் தற்போது பாலிவுட்டில் கவனத்தைத் திருப்பியுள்ளார்.
இவர் நடிப்பில் ஹிந்தியில் உருவான ’மும்பைக்கார்’, ‘மேரி கிறிஸ்துமஸ்’, ‘ஜவான்’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. இதில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ளார்.
மேலும், அமேசான் பிரைமில் வெளியான ‘ஃபார்ஸி’ இணையத் தொடரில் நடித்து வரவேற்பைப் பெற்றிருந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: விஜய் - 68.. வாழ்த்துத் தெரிவித்த அஜித்!
இந்நிலையில், நடிகர் சல்மான் கான் புதிதாக நடிக்கவுள்ள திரைப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.